Tamil News Channel

வீடியோவை பதிவு செய்த இளைஞனுக்கு கௌரவிப்பு….

laks

சிறுமி ஒருவரை கொடூரமாக தாக்கிய குறித்த வீடியோவை பதிவு செய்த இளைஞன் பொலிஸாரினால் கௌரவிக்கப்பட்டு, 5 இலட்சம் ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு – மணலாறு (வெலிஓயா) பகுதியில் சிறுமி மீது கடுமையாக தாக்குதல் நடாத்திய வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதை அடுத்து, தாக்குதல் நடாத்திய குகுல் சமிந்த என்ற சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபர்களை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதவிய நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரினால் இந்த சன்மானம் வழங்கி வைக்கப்பட்டது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts