November 13, 2025
வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு எச்சரிக்கை..!
News News Line Top Updates புதிய செய்திகள்

வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு எச்சரிக்கை..!

Feb 21, 2024

இந்த நாட்களில் வீடுகளை வாடகைக்கு விடும்போது பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையின் காரணமாக சில ஆட்கடத்தல்காரர்கள் வீடுகளை விட்டு வெளியேறி வாடகைக்கு வீடுகளை பெற்றுக்கொண்டு ஒளிந்து கொள்ள முயற்சிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிகமாக தங்குவதற்கு வந்த நபரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் எனவும், அவர் கடந்த 5 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *