பலரும் வீட்டில் எந்த இடத்திலிருந்தும் இணையத்தை பயன்படுத்த விரும்புவதால், wireless wifi இணைப்புக்கு அதிக வரவேற்பு உள்ளது.
ஆனால், புதிதாக வாங்கிய wifiயின் வேகம் காலப்போக்கில் குறையலாம். இதற்கு முறையான பராமரிப்பு இன்மை ஒரு முக்கிய காரணம்.
உங்கள் wifi சிறப்பான இணைய வேகத்தை வழங்க, wifi சரியாக பயன்படுத்துவது அவசியம்.
wifi திறந்த, உயரமான இடத்தில் வைக்கவும்: தடைகளின்றி சிக்னலை அனுப்ப, அதை திறந்தவெளியில், உயரமான இடத்தில் வைக்கவும். உலோகப் பொருட்களிலிருந்து விலக்கி வைக்கவும்.
ஆண்டெனாக்களை சரி செய்யவும்: உங்கள் wifi வெளிப்புற ஆன்டெனாக்கள் இருந்தால், அவற்றை செங்குத்தாக சரிசெய்வது சிக்னல் தரத்தை மேம்படுத்தும்.
wifi Reastart செய்யவும்: வழக்கமாக Reastart செய்வது சிக்னல் வலிமையை மேம்படுத்தும்.
இணைய சேவை வழங்குநரை அணுகவும்: இணைய வேகம் மிகவும் குறைவாக இருந்தால், உங்கள் திட்டத்தை மேம்படுத்த முடியுமா என்று உங்கள் இணைய சேவை வழங்குநரை அணுகவும்.
வைஃபை சாதனங்களை குறைக்கவும்: ஒரே நேரத்தில் அதிக சாதனங்கள் இணைக்கப்பட்டிருந்தால் வேகம் குறையும். தேவையற்ற சாதனங்களை துண்டிக்கவும்.
பழைய Routers மாற்றவும்: பழைய Routers புதிய தொழில்நுட்பங்களை ஆதரிக்காது. தேவைப்பட்டால் புதிய Routers வாங்கவும்.
இந்த டிப்ஸ் பின்பற்றினால், உங்கள் வீட்டில் வலுவான மற்றும் வேகமான wifi இணைப்பை பெற முடியும்.