July 14, 2025
வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 02 மாத குழந்தை பரிதாப மரணம்!
புதிய செய்திகள்

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 02 மாத குழந்தை பரிதாப மரணம்!

Jun 10, 2024

வவுனியா – ஓமந்தை – புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின்  சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இச் சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வரவேற்பறை சுவரின் ஒரு பகுதியே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.

இவ் விபத்தில் 02 மாத குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *