இந்தியாவின் ,தமிழகத்தில் பல பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறமையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இதில் மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற நபர் நேற்றிரவு தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளை கனமழை காரணமாக திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
இந்த அனர்த்ததில் சம்பவ இடத்திலயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்க்கு வந்த பொலிஸார் குறித்த நபரின் உடலை பிரதேச பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேற்கூரை இடிந்துவிழும் அளவுக்கு கனத்த மழை பெய்து வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.