வீட்டிலிருந்து எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண்!
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில் 43 வயதுடைய பெண் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருகையில், குறித்த நபர் தனது வீட்டில் தனியாக உறங்கியுள்ள நிலையில் இரவு 10 மணியளவில் எரிகாயங்களுடன் அலறியடித்து வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த வேளை, பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளார்.
பின்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் முன்பகை காரணமாக பெற்றோல் குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![]()