பொதுவாகவே இந்து மற்றும் வாஸ்து சாஸ்திரங்களின் பிரகாரம் பல்லிகளை வைத்து சகுணம் பார்க்ப்படும் வழக்கம் தொன்று தொட்டு காணப்படுகின்றது.
வீட்டில் பல்லிகள் இருப்பது மிகவும் இயல்பான விடயம் தான் பல்லிகள் இருப்பதை வைத்து தான் முன்னைய காலங்களில் மனிதர்கள் வாழும் இடங்களை கணித்தனர்.
வீட்டில் பல்லிகள் இருப்பது மங்களகரமானதாகவே பார்க்கப்படுகின்றது. சில நேரங்களில் மிகவும் அரிதாக வீட்டில் குட்டி பல்லிகள் இருப்பதை காண முடியும் இதற்கு வாஸ்து சாஸ்திரத்தின் பிரகாரம் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரங்களின் பிரகாரம் வீட்டில் குட்டி பல்லிகள் இருப்பது அதிர்ஷ்டத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் மங்களகரமான நிகழ்வை முக்கூட்டியே தெரிப்பதாகவே குட்டி பல்லிகளின் நடமாட்டம் பார்க்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் ஒரு பெரிய நல்ல நிகழ்வு நடக்க போகிறது என்பதையும் நிதி ரீதியில் பாரிய வளர்ச்சி ஏற்பட போவதையும் இது குறிக்கின்றது.
ஒன்றுக்கும் மேற்பட்ட குட்டி பல்லிகளை ஒன்றாக பார்த்தால் அது மிகவும் அரிய நிகழ்வாகும். இதனால் ராஜயோகத்தை பெறப்போகின்றீர்கள் என்று அர்த்தம்.
அதமட்டுமன்றி ஆண் மற்றும் பெண் பல்லி வீட்டில் இணைவதை கண்டால் கணவன் மனைவிக்கு இடையில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி பெருகும் என்பது ஐதீகம்.
முக்கியமாக பண்டிகை நாட்களில் வீட்டில் குட்டி பல்லியை கண்டால் எதிர்பாராத வகையில் பணப்புழக்கம் அதிகரிக்கப்போகின்றது என்றே அர்த்தம்.
வீட்டில் பல்லி குட்டியை கண்டால் அதை விரட்டவோ, கொல்லவோ கூடாது. அதை கொன்றால் அசுப பலன்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.
பாரிய பண தட்டுப்பாடு மற்றும் தொழில் ரீதியான வீழ்சிக்கு வழிவகுக்கும். ஆனால் தற்செயலாக வீட்டில் பல்லி குட்டி இறந்து கிடந்தால் பயப்பட தேவையில்லை அதனை நிலத்தில் புதைத்துவிட்டால் அந்த விதமான தீமையும் ஏற்படாது.