Tamil News Channel

வீட்டு வளவு ஒன்றினுள் புகுந்த ராட்சத முதலை ..!

புத்தளம் தேவனுவர பகுதியில் நேற்று அதிகாலை இராட்சத முதலையொன்று தனியார் ஒருவரின் வீட்டு வளவு  ஒன்றினுள் புகுந்துள்ளது.

இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு வனஜீவரசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்று கடும் பிரயத்தணத்திற்கு மத்தியில் முதலையைப் பிடித்துள்ளனர்.

பின்னர் குறித்த முதலையை கல்வில சூழலியல் பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் விடுவித்தனர்.

குறித்த முதலை சுமார் 9 அடி நீளமுடையது எனவும் சுமார் 150 கிலோ கிராம் எடை கொண்டு காணப்படுவதாகவும் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் இதன்போது தெரிவித்தனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts