வீட்டோடு எரிந்த 8 இலட்சம் ரூபா ..!
யாழ். புத்தூர் மேற்கு கலைமதிப் பகுதியில் உள்ள நேற்று(26) இரவு 8.30 மணியளவில் வீடொன்று தீப்பிடித்து எரிந்து சேதமானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் யாரும் இல்லாத நேரம் தீப்பரவல் இடம்பெற்றதாகவும், அன்றாடம் கூலி வேலை செய்து காணி வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த 8 இலட்சம் ரூபா பணமும் தீயில் எரிந்துள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பால் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சம்பவ இடத்துக்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்படுத்த முயன்ற பொழுதும் முற்று முழுதாக வீடு எரிந்து நாசமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய மின்சார ஒழுக்கு காரணமாக இந்த அனர்த்தம் இடம் பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
![]()