முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பொதுத் தேர்தலில் வீணை சின்னத்தில் தனித்து போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இம்முறை வடக்கு கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் வேட்புமனுக்களை வழங்க கட்சி திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் த.புஸ்பராசா தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்குத் தேவையான வேட்புமனுக்கள் தயாரிக்கும் பணிகள் இந்த நாட்களில் நடைபெற்று வருவதாகவும், தனது கட்சி கூட்டணி அமைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.