Wednesday, March 11, 2026

வீதியால் சென்ற குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

Must Read

புதன்கிழமை (22/1/2025) யாழ்ப்பாணம் – றொட்டியாலடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென கிழே விழுந்து உயிரிழந்துள்ளார். செட்டிவளவு, இணுவில் மேற்கு பகுதியை சேர்ந்த சபாபதிப்பிள்ளை நித்தியானந்தம் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்தவேளை கீழே மயங்கி விழுந்துள்ளார். இதன்போது அந்த வீதியால் வந்தவர்கள் அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

[யாழ் நிருபர் – இரட்னசிங்கம் முரளிதரன்]

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights