யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் இன்று (22) அதிகாலை டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டு சரிந்து விழுந்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட அரச பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட எரிபொருள் தாங்கி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி எரிபொருள் வீதியில் கொட்டியுள்ளது.
இதன்போது வீதியில் வந்த டிப்பர் வாகனம் கொட்டியிருந்த எரிபொருளில் சறுக்கி விபத்துக்குள்ளானதுdan அரச பேருந்தில் பயணித்த பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் தடம்புரண்ட எரிபொருள் பவுசரில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் சிந்திக் காணப்படுவதோடு விபத்துக்குள்ளான வாகனங்களை கனரக வாகனங்கள் மூலம் அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டதுடன் வீதியில் வாகனங்கள் சறுக்காது இருக்க மண் பரப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.