லுனுவில, ஜயா மாவத்தையைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவர் வீதியைக் கடக்க முயன்ற போது பஸ் ஒன்றில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பாதசாரிகள் குழுவொன்று வீதியைக் கடக்கும்போது, நீர்கொழும்பு பகுதியில் இருந்து சிலாபம் சென்ற பஸ் ஒன்று நிறுத்தப்பட்டு மீண்டும் முன்னோக்கிச் செல்ல முற்பட்டபோது, முன்பக்கமாக வீதியைக் கடக்க முற்பட்ட குறித்த பெண் மீது பஸ் மோதியுள்ளதுடன், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.