வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் குமாரதாச சந்தியில் தனியார் பேருந்தொன்று சற்று முன்னர் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
விபத்து காரணமாக 7 பாடசாலை மாணவர்கள் மற்றும் பேருந்து சாரதி உட்பட 15 பேர் வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.