Tamil News Channel

வெடுக்குநாறிமலை விவகாரம் – ஜனாதிபதி சந்திப்பு…!

N 2.1

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்க்கும், தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளைய தினம்(20) வரை பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்திருந்தனர்.

இதற்கமைய, நேற்றைய தினத்தில் அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரியிருந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் அதற்கான நேரம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில்  தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்களை நாளை (20)  முற்பகல் 11:30 மணியளவில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள தமது அலுவலகத்தில் சந்தித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பில் நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்வார்களா என்பது தொடர்பில் இதுவரை எவ்வித அறிவிப்புக்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts