நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதி வென்னப்புவ பகுதியில் (30) நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 71 வயதுடைய வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அப்பிரதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த கெப் வண்டி ஒன்று வீதியில் சென்றுகொண்டிருந்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் இதனையடுத்து கெப் வண்டியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.