நெய்யில் பல வகையான நன்மைகள் உள்ளது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சாப்பிடும் பொழுது உடல் ஆரோக்கியம் பல வகைகளில் மேம்படும்.
இதில் சங்கிலி கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால். நாள் முழுவதும் ஆற்றலோடு இருக்க பெரும்பாலும் உதவுகிறது.
இதில் இருக்கக்கூடிய ஆரோக்கியமான கொழுப்புகள் பசியை அடக்கி அதிகப்படியாக சாப்பிடுவதை குறைக்க உதவுகிறது. இதனால் உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம்.
மூளை செல்களின் மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் நெய்யில் நிறைந்துள்ளது.
இதில் இருக்கும் பியூட்ரிக் அமிலம் என்ற குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலத்தில் வீக்க எதிர்ப்பு பண்புகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இதன்னால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெறுகிறது.
உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும் நச்சு நீக்க பண்புகள் நெய்யில் உள்ளதாக நம்பப்படுகிறது.
நெய் சாப்பிட்டால் உங்களுடைய ஹார்மோன் அளவுகள் சமநிலையில் இருக்கும். இது சருமத்தை உள்ளிருந்து ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைப்பதற்கு உதவுகிறது.
ஊட்டச்சத்து உறிஞ்சுதல் சிறந்த முறையில் நடைபெறுவதற்கு காலை நெய் சாப்பிடுவது பயனளிக்கும். இது மலத்தை மென்மையாக்கி, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.