Tamil News Channel

வெற்றிகளை அள்ளி வழங்கும் அரச மர இலை பரிகாரம்..!

ar1

நாம் ஆலயங்களுக்கு செல்கிறோம். இறைவனை கண்டு தரிசித்து, காரியங்களை நிறைவேற்ற வேண்டும் என சில கோரிக்கைகளை சமர்ப்பித்து வணங்கி விட்டு வருகிறோம். ஆனால் இறைவனிடம் சமர்ப்பித்த கோரிக்கை நிறைவேறுவதே இல்லை. அதனால் நாம் கோரிக்கை மாற்றிக் கொள்ளாமல் ஆலயத்தையும், இறைவனையும் மாற்றிக் கொண்டு மீண்டும் அதே கோரிக்கையை சமர்ப்பிக்கிறோம்.  எம்முடைய எண்ணங்கள் நிறைவேற வேண்டும் என இறைவனை தொடர்ச்சியாக பிரார்த்தனை செய்கிறோம்.

சிலருக்கு அவர்களுடைய பிரார்த்தனை என்பது ஆண்டு கணக்கில் நீடித்துக் கொண்டிருக்கும். உதாரணமாக திருமணம் நடைபெற வேண்டும் என நினைத்து இறைவனை வழிபட தொடங்கி இருப்போம். ஆனால் திருமணம் என்பது பொருத்தமான வரன் கிடைக்காமல் தாமதமாகி கொண்டே இருக்கும். திருமண மட்டுமல்ல வேலை வாய்ப்பு கிடைத்திட வேண்டும் என்றும் இறைவனை வழிபட தொடங்கி இருப்போம். தகுதிக்கேற்ப விருப்பப்பட்ட பணி வாய்ப்பு கிடைக்காமல் தாமதமாகி கொண்டே இருக்கும்.

ஒரு புள்ளியில் இறைவனிடம் இது தொடர்பான வேண்டுதலை கோரிக்கையாக வைப்பதில் சலனம் ஏற்படும். ஆனால் எம்முடைய முன்னோர்கள் நீங்கள் இறைவனிடம் வைக்கும் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுவதற்கும் ஒரு பரிகாரம் இருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அதுதான் அரச மர இலை பரிகாரம்..!

உங்களது கோரிக்கைகள் நியாயமானவைகளாகவும், பொருத்தமானவைகளாகவும், பேராசை அற்றவைகளாகவும் இருந்தால் அவை உடனடியாக நிறைவேறும். இதற்கு அரச மரத்தடியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானை வணங்க தொடங்குங்கள். அத்துடன் அரச மரத்திலிருந்து விழுந்த இலைகள் அல்லது அரச மரத்தில் உள்ள இலைகளை நூற்றியெட்டு எனும் எண்ணிக்கையில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த நூற்றியெட்டு இலைகளையும் தண்ணீரால் சுத்தப்படுத்தி, அதில் வெள்ளை மற்றும் மஞ்சள் வண்ண ஸ்கெட்ச் பேனாவை கொண்டு, உங்களது கோரிக்கைகளில் நியாயமானவற்றை மூன்றை மட்டும் தெரிவு செய்து, அந்த நூற்றியெட்டு அரச இலைகளிலும் எழுதுங்கள்.

அதன் பிறகு அரச மரத்தடி விநாயகர் சன்னதிக்கு சென்று நூற்றியெட்டு இலைகளையும் வரிசையாக வைத்து அதற்கு சந்தனத்தாலும், குங்குமத்தாலும் பொட்டு வைத்து, அதன் மீது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் களிப்பாக்கு அல்லது கொட்டை பாக்கை நூற்றியெட்டு என்ற எண்ணிக்கையில் வாங்கிக் கொண்டு, அதனை நூற்றியெட்டு அரச மர இலைகளிலும் ஒவ்வொன்றாக வைத்து விட வேண்டும். அதன் பிறகு மனதார உங்களது பிரார்த்தனையை விநாயகப் பெருமானிடம் சமர்ப்பிக்கவும்.

அந்த தருணத்தில் விநாயகரின் காயத்ரி அல்லது விநாயகர் பாடல்கள் ஏதேனும் ஒன்றை மனதில் பாட வேண்டும். அதன் பிறகு நூற்றியெட்டு அரச இலையையும் கொட்டை பாக்கினையும் ஒவ்வொன்றாக ஒரு நூலில் கட்டி அதனை மாலையாக்குங்கள். அதனை விநாயகருக்கு சாற்றி, விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை ஒன்றை செய்யுங்கள். அர்ச்சனை செய்த பிறகு அந்த அரச மரத்தடி விநாயகரை இரூபத்தியேழு முறை வலம் வந்து வணங்குங்கள்.

அந்தத் தருணத்தில் உங்களது கோரிக்கை விரைவில் நிறைவேற வேண்டும் என்ற ஒரு முகமான பிரார்த்தனை செய்யுங்கள்.  இதனை திங்கட்கிழமைகளில் காலை வேளையில் அல்லது ஏனைய கிழமைகளில் காலை வேளைகளில் மட்டுமே செய்திட வேண்டும். மாலை வேளையில் செய்தால் உங்களது பிரார்த்தனை பலிக்காது. அரச இலை கொண்டு அரச மரத்தடி விநாயகரை வணங்கும் இந்த இலை பரிகார வழிபாட்டை ஒருமுறை மேற்கொண்டால் போதுமானது. உங்களது கோரிக்கை விநாயகப் பெருமானின் அருளால் விரைவாக நிறைவேறி, வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெறுவதை அனுபவத்தில் காணலாம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts