2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (Channai Super Kings) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(kolkata knight riders) ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 09 விக்கட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது.
கொல்கத்தா அணி சார்பாக ஷ்ரேயாஸ் ஐயர்(Shreyas Iyer ) 34 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா(Ravindra Jadeja) மற்றும் துஷார் தேஷ்பாண்டே(Tushar Deshpande) தலா 03 விக்கெட்டு வீதமும் முஸ்தாபிசுர் ரஹ்மான்(Mustafizur Rahman) 02 விக்கெட்டுக்கலையும் வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை 17.4 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.
சென்னை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad ) 67 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.
கொல்கத்தா அணிக்கு வைபவ் அரோரா (Vaibhav Arora ) 02 விக்கெட்டுக்களையும் சுனில் நரைன்(Sunil Naren) ஒரு விக்கட்டையும் பெற்றுக் கொடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா(Ravindra Jadeja) தெரிவாகியிருந்தார்.
இந்த வெற்றியுடன் சென்னை அணி 06 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது நிலையில் உள்ளது.