ஜோதிடத்தை பொறுத்தளவில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணம் இருக்கிறது. ஒருவருடைய தனத்திறமையும் ஆற்றலும் அவர்களுடைய எதிர்காலத்தை கணிக்க உதவும்.
அந்த வகையில் சில ராசியை சேர்ந்தவர்களுக்கு பிறரின் மனதை படிக்கும் சக்தியும் உண்டு. அந்தவகையில் வெற்றிலையில் மை போட்டு பார்ப்பது போல் ஒருவருடைய மனதை தெளிவாக புரிந்துக்கொள்ளும் அந்த ராசியினர் யார் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இயல்பாகவே ஒருவருடைய மனதை புரிந்துக்கொள்ளக் கூடியவர்கள். புத்திசாலியனவர்களாகவும் உணர்வை கட்டுப்படுத்தும் திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ளுணர்வு நிறைந்ததாக இருக்கும். ஒருவருடைய பேச்சு வைத்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என கடக ராசிக்காரர்கள் அறிந்துக்கொள்வார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் நாணயத்தில் இருப்பக்கத்தை போன்றவர்கள். எப்போதும் சமநிலையில் இருக்க வேண்டும் என எண்ணி, பிறரின் மனதை அவர்களுடைய கண்களில் பார்பார்கள்.
பிறருடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அவர்களுடன் நல்லிணக்கத்தை கொண்டு செல்வார்கள். அனைவரிடமும் அன்பையும் மரியாதையையும் சரி சமமாக காட்டுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மர்மமான முறையில் ரகசியத்தை கடைப்பிடிக்க விரும்புவார்கள். ஒருவருடைய உண்மையான குணத்தை பற்றி தெரிந்துக்கொள்வார்கள். ஒருவருடைய மன கஷ்டத்தை புரிந்துக்கொண்டு அவர்களுடைய மன உணர்விற்கு மதிப்பளிப்பார்கள்.
மீனம்
மீன ராசியை சேர்ந்தவர்கள் உணர்ச்சி திறன் மிக்கவராக இருப்பார்கள். பெரும்பாலும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடுக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஒருவருடைய விருப்பத்தை எளிதாக புரிந்துக்கொள்ளும் மனப்பாங்கு உண்டு. ஒருவருடைய மனதில் எளிதாக நுழைவார்கள். பிறரின் மனதை எப்படி மாற்ற வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டு சரியான முறையில் பழகுவார்கள்.