2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் (28) 2 போட்டிகள் நடைபெற்றிருந்தன.
அதில் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
இதில் அவுஸ்திரேலியா அணி சார்பாக மார்டின் பொய்லி மற்றும் கிரைக் கூட்வின் ஆகியோர் முறையே 45 மற்றும் 89 ஆவது நிமிடங்களில் ஒரு கோலை பெற்றனர்.
மேலும், ஹரி சோட்டர் மேலதிக ஆட்டநேரத்தின் 1 நிமிடத்தில் ஒரு கோலை பெற்றதுடன், எதிரணி வீரர் எல்கன் பக்கொட் 12 ஆவது நிமிடத்திலும் ஒரு கோல் கிடைத்தது.
இந்த வெற்றியுடன் அவுஸ்திரேலியா அணி எதிர்வரும் வெள்ளிக்கிழமை இரண்டாவது காலிறுதிப் போட்டியில் மோதவுள்ளது.
இன்றைய தினம் ஈராக் மற்றும் ஜோர்டான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.