Tamil News Channel

வெற்றி பெற்றது கட்டார் அணி

8adbed5b-88c9-484d-964d-e8ac8443d5d3

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் A குழுவின் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தன.

அதில் முதலாவது போட்டியில் சீனா மற்றும் கட்டார் ஆகிய அணிகள் மோதியிருந்தன.

இப்போட்டியில் கட்டார் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

கட்டார் அணி சார்பாக ஹஸ்ஸன் அல் ஹைடஸ் 66 ஆவது நிமிடத்தில் ஒரு கோலை பெற்றார்.

இந்த வெற்றியுடன் கட்டார் அணி 9 புள்ளிகளுடன் A குழுவின் புள்ளிப்பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளது.

மேலும் கட்டார் அணி எதிர்வரும் திங்கட்கிழமை அடுத்த கட்ட சுற்றுப் போட்டியில் விளையாடவுள்ளது.

இன்றைய தினம் நடைபெறவுள்ள 4 போட்டிகளில் B குழுவின் போட்டிகளில் அவுஸ்திரேலியா மற்றும் உஸ்பகிஸ்தான் அணிகளும், இந்தியா மற்றும் சிரியா அணிகளும் மோதவுள்ளன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts