2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் (21) F குழுவின் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தன.
அதில் இரண்டாவது போட்டியில் கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் சவுதி அரேபியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
சவுதி அரேபியா அணி சார்பாக மொஹமெட் கன்னோ 35 ஆவது நிமிடத்திலும் ஃபைசெல் அல் கம்டி 84 ஆவது நிமிடத்திலும் தலா ஒரு கோலை பெற்றனர்.
அத்துடன் கிர்கிஸ்தான் அணி வீரர்களான அய்சர் அகமடவ் மற்றும் கிமி மெர்க் ஆகியோர் முறையே 9 ஆவது மற்றும் 52 ஆவது நிமிடங்களில் நடுவரால் சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த வெற்றியுடன் சவுதி அரேபியா அணி 6 புள்ளிகளுடன் F குழுவின் புள்ளிப்பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளது.
சவுதி அரேபியா அடுத்த போட்டியில் எதிர்வரும் வியாழக்கிழமை தாய்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இன்றைய தினம் நடைபெறவுள்ள A குழுவின் இரண்டாவது போட்டியில் தஜிகிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.