18 வது ஐ.பி.எல். கிரிக்கட் தொடரின் இறுதி போட்டி ரோயல் சலன்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப கிங்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்றிரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் ரோயல் செலன்சர்ஸ் பெங்களூர் 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 19 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 1 -வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் மகுடத்தை வெல்லப்போகும் அணி எது என்று இரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரு அணிகளுமே ஒன்றுக்கு ஒன்று சவலான அணி ஆகும் என்பதில் ஐயம் இல்லை.