Tamil News Channel

வெளிநாடு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது…!

arrest

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி , 50 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் பணத்தினை பெற்றுக்கொண்டு  நீண்ட நாட்களாகியும் இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கவில்லை.

இந்நிலையில் , இளைஞன் தனது பணத்தினை திருப்பி கேட்ட போது , அதனை கொடுக்க பெண் மறுத்ததால், இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்து  விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts