December 17, 2025
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட முக்கிய குற்றவாளி!!!
புதிய செய்திகள்

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட முக்கிய குற்றவாளி!!!

May 31, 2024

பாதாள உலக கும்பலின் தலைவரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரருமான விதானகே ருவன் சாமர என்றழைக்கப்படும் மிதிகம ருவன்” துபாயிலிருந்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இன்று  (31) காலை அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் துபாய் களியாட்ட விடுதியொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் மிதிகம ருவன் அந்நாட்டு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

மேலும் சர்வதேச பொலிஸாரின் சிவப்பு பட்டியலில் அவரது பெயர் இருந்ததுள்ளதுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் அவர் அழைத்துச் செல்லப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *