July 14, 2025
வெளிநாட்டு மாணவர்களுக்கு உடனடியாக வழங்கப்படவுள்ள கிரீன் கார்ட்..!
World News புதிய செய்திகள்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உடனடியாக வழங்கப்படவுள்ள கிரீன் கார்ட்..!

Jun 22, 2024

அமெரிக்க கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு உடனடியாக கிரீன் கார்ட் வழங்குவதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

குறித்த நடவடிக்கை இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த திறமையான மாணவர்களை அமெரிக்காவில் தங்க அனுமதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “நான் இதை செய்ய விரும்புகிறேன், செய்வேன். அமெரிக்க கல்லூரிகளில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு உடனடியாக கிரீன் கார்ட் வழங்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதன் மூலம் அவர்கள் அமெரிக்காவில் வாழவும், இங்குள்ள வளர்ச்சிக்கு உதவவும் முடியும். திறமையான மாணவர்களை இங்கு நிறுத்த அமெரிக்கா முயற்சிக்க வேண்டும்.

அமெரிக்காவில் பட்டம் பெற்ற பலரைத் தனக்குத் தெரியும், ஆனால் கிரீன் கார்ட்  இல்லாததால் இங்கு தங்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டின் தரவுகளின்படி, 2 இலட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டம் பெறுகின்றனர். ட்ரம்ப் தனது வார்த்தைகளை கடைபிடித்தால், இந்த மாணவர்களில் பலர் எளிதாக அமெரிக்க கிரீன் கார்டைப் பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *