November 17, 2025
வெளியாகவுள்ள பரீட்சை பெறுபேறுகள்…
Updates கல்வி புதிய செய்திகள்

வெளியாகவுள்ள பரீட்சை பெறுபேறுகள்…

May 28, 2024

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வார இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில்  மொத்தம் 346,976 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இவர்களில் 281,445 பாடசாலை பரீட்சாத்திகளும் மற்றும் 65,531 தனியார் பரீட்சாத்திகளும் தோற்றியிருந்தனர்.

பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் – www.doenets.lk,www.results.exams.gov.lk போன்ற இணையத்தளங்களில் பார்வையிட்ட முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *