Tamil News Channel

வெளியிட்டப்படும் புதிய வர்த்தமானி…

வீதி விபத்துக்களை குறைப்பதற்கு வேகக் கட்டுப்பாடு தொடர்பில் தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானியை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (11.07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடவத்தை பேருந்து நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்தப் பேருந்து நிலையங்களில் நவீன போக்குவரத்து முகாமைத்துவ முறைகளும், நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு கடந்த மாதம் 30 ஆம் திகதி வரை 1103 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், குறித்த வீதி விபத்துகளால் 1154 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, இந்நிலைமையைக் குறைக்க எமது அமைச்சு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டுக்கு தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு 50 மில்லியன் ரூபாவை இலங்கை பொலிஸாருக்கு வழங்க வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts