பாகிஸ்தானில் கடந்த ஜூலை முதலாம் திகதி முதல் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 209 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் மழை வெள்ளம் தொடா்பான சம்பவங்களில் பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 24 போ் உயிரிழந்தனா். இத்துடன் இந்த பருவமழை காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 209 ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பாகிஸ்தானில் ஜூலை முதல் செப்டம்பா் வரை பருவமழை பெய்வது வழக்கம். ஆனால் இவ்வாண்டு பருவமழை அளவுக்கு அதிகமாகப் பெய்துவருவதாகக் கூறப்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நிபுணா்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.