வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு Global Max Networks (Pvt) Ltd நிறுவனத்தால் பல்வேறு உதவிப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை, பெரியகுளம், முரசுமோட்டை பகுதிகளில் உள்ள நலன்புரிநிலையங்களுக்கு இந்த உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த உதவித்திட்டத்தை நேற்று (19) Global Max Networks (Pvt) Ltd நிறுவனத்தின் பணிப்பாளர் நேரடியாக சென்று நிலையங்களுக்கு பொறுப்பானவர்களிடம் பொருட்களை கையளித்தார்.
கிளி/கண்டாவளை மகாவித்தியாலய நலன்புரிநிலையத்தில் 120 குடும்பங்களுக்கு மேல் தங்கியுள்ளதுடன், பெரியகுளத்தை அண்டிய பகுதிகளில் வசித்த 153க்கும் மேற்பட்டவர்கள் கிளி/முருகானந்தா ஆரம்ப பாடசாலையில் தங்கியுள்ளனர்.
மேலும், முரசுமோட்டை திருச்சபை முன்பள்ளியில் 50 க்கும் மேற்பட்டவர்கள் தங்கியுள்ள நிலையில் அவர்களுக்கான இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்கு சமைத்து வழங்குவதற்காக அரிசி, பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், சோயாமீற், சீனி, பிஸ்கட் போன்ற உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
Global Max Networks (Pvt) Ltdஆல் வழங்கப்பட்ட உதவித்திட்டங்களால் 300க்கும் மேற்பட்டவர்கள் நன்மையடந்ததாகவும், 75000 ரூபாய்க்கும் மேற்பட்ட உலர்உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டதாகவும் எமது காரியாலய செய்தியாளர் பாரதிராஜன் சாருகான் தெரிவித்தார்.
இரணைமடுகுளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கண்டாவளைப்பகுதிகளில் பரவியுள்ள நீர் தொடர்ச்சியாக குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார் .