மன்னார் மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் 4 தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் (18) பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேரில் சென்று பார்வையிட்டு உள்ளதோடு அந்த மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு உரிய அதிகாரிகளிடம் கோக்ரிகை விடுத்தார்.
மன்னார் மாவட்டத்தில் தொடரும் வெள்ளத்தினால் 632 குடும்பங்களைச் சேர்ந்த 2245 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இம் மக்களுக்கு தேவையான மேலதிக உதவிகள் மற்றும் அவசரத்தேவைகளை இராணுவமும் அரசசார்பற்ற நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.