கொழும்பு – வெள்ளவத்தையிலுள்ள ஆடையகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் பிரபல ஆடை நிறுவனமான (NOLIMIT) நிறுவனத்தின் வெள்ளவத்தை கிளையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தின்போது ஆடையகத்திலிருந்த பொதுமக்கள் உட்பட பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகvum இதன்போது சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
இலத்திரனியல் கோளாறு காரணமாகவே இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2014 ஆண்டு NOLIMIT நிறுவனத்தின் பாணந்துறை கிளையும் தீ விபத்தினால் முற்றாக சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.