அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் வெள்ளவத்தை கிளையான ராஜ்ய ஒசுசல மருந்தகம் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவினால் நேற்றைய தினம் (21) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
குறித்த மருந்தகம், வெள்ளவத்தையில் உள்ள இலங்கை வங்கிக் கிளைக்கு அருகில் அமைந்துள்ள அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் (SPC) வலையமைப்பின் கீழ் 56ஆவது மருந்தகமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் வெள்ளவத்தை ராஜ்ய ஒசுசலாவிலிருந்து முதலாவது கொள்வனவு செய்யப்பட்டது.
அனுபவம் வாய்ந்த மருந்தாளுனர்களால் சேவை செய்யப்படும் SPC கிளை, சுகாதார அதிகாரிகளின் ஒப்புதலுடன் தரப்படுத்தப்பட்ட மருந்துகளை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்குகிறது.
இந்நிலையில் முதியவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் SPC விற்பனை நிலையங்களில் 5% சிறப்பு தள்ளுபடியுடன் மருந்துகளை வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.