July 14, 2025
வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்ட நபர் 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு!
புதிய செய்திகள்

வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்ட நபர் 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு!

Nov 29, 2024

கிட்டங்கி ஆற்றுக்கு குறுக்காக 26.11.2024 அன்று பயணம் செய்த 48 வயது மதிக்கத்தக்க கூலித் தொழிலாளி ஒருவர் வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில், 4 நாட்களாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இலங்கை கடற்படையினர் இன்று திரவந்தியமேடு பகுதியில் கரையொதுங்கிய நிலையில் சடலமொன்றை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் ஆரம்பத்தில் யார் என்று  அடையாளம் காணப்படவில்லை.பின்னர் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.

அங்கு ஆற்றில் அடித்து செல்லப்பட்டவரின் உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டினர்.

மேலும் சடலமாக மீட்கப்பட்டவர் கல்முனை பாண்டிருப்பு பகுதியில் வசித்த  நாகலிங்கம் சுரேஸ் (வயது-48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *