Tamil News Channel

வேகமாக சார்ஜிங் செய்யும் ஸ்மார்ட்போன்கள்… விலை எவ்வளவு தெரியுமா?

மிகவும் வேகமாக சார்ஜிங் மற்றும் சிறந்த பேட்டரி ஆயுள் கொண்ட ஸ்மார்ட் போன்களின் தொகுப்பை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

Realme Narzo 70 Pro

குறித்த ஸ்மார்ட் போனில் 67W பவம் அடாப்டர் மூலம் விரைவாக சார்ஜ் செய்ய முடிவதுடன், 20 சதவீதம் முதல் 100 சதவீதம் சார்ஜிங் வெறும் 42 நிமிடங்களில் செய்துவிடும். இதில் உள்ள  5,000mAh பேட்டரி 16 மணி நேரம் 24 நிமிடங்கள் பயன்பாட்டை வழங்குகின்றது.

OnePlus Nord CE 4 Lite

OnePlus Nord CE 4 Lite ஸ்மார்ட்போனானது 20 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சார்ஜிங் செய்வதற்கு வெறும் 50 நிமிடங்கள் மட்டுமே ஆகின்றது. இதன் 5,500mAh பேட்டரி 11 மணி நேரம் 30 நிமிடங்கள் பயன்பாட்டை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

Redmi Note 14

குறித்த ஸ்மாரட்போனாது வெறும் 32 நிமிடங்களில் முழுமையான சார்ஜ் செய்ய முடிகின்றது. சந்தையில் கிடைக்கும் சிறந்த பேட்டரியாகும். 5,110mAh பேட்டரி 19 மணி நேரம் 21 நிமிடங்கள் நீடிக்கும் தன்னை கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Tecno POVA 6 Pro

குறித்த ஸ்மார்ட்போனில் 70W வேக சார்ஜிங் திறன் கொண்டுள்ள நிலையில், 51 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இதன் 6,000mAh பேட்டரி 15 மணி நேரம் 56 நிமிடங்கள் வழங்குவது குறிப்பிடத்தக்கது.

Realme P1

Realme P1 உடன் வரும் 45W சார்ஜர் அதன் பேட்டரியை சுமார் 48 நிமிடங்களில் 20% முதல் 100% வரை ரீசார்ஜ் செய்ய முடியும். 5,000mAh பேட்டரி 16 மணி நேரம் 20 நிமிடங்கள் நம்பகமான சோதனை முடிவை வெளியிட்டது. ரூ.20,000க்குக் கீழ் உள்ள சிறந்த கேமிங் போன்களில் Realme P1ம் ஒன்றாகும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts