வேட்பாளர்களின் பிரசார செலவுகளை கண்காணிக்க உருவாக்கப்பட்ட புதிய இணையத்தளம்…!

0
1

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார செலவுகளை கண்காணிக்கும் வகையில் இலங்கையில் முதன்முறையாக இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

‘வோட் மணி மீற்றர்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த இணையத்தளத்தின் வெளியீட்டு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த இணையத்தளம் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா இன்ஸ்டிட்யூட் மற்றும் பாஃப்ரல் அமைப்பு உட்பட ஆறு முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக வாக்காளர் சார்பாக வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய வரம்பை விட அதிகமாக செலவு செய்துள்ளதாக தேர்தலின் பின்னர் கண்டறியப்பட்டால் அதற்கு சட்ட ஏற்பாடுகள் கூட உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here