வாகரை பிரதான வீதியிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் வீதியை கடந்த சிறுவன் மீது வேன் மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை மீராவோடையைச் சேர்ந்த 8 வயது சிறுவனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.
இந்த சிறுவனுடன் அவனது தாய், தந்தையர் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது பனிச்சங்கேணி பாலத்தில் முச்சக்கரவண்டியின் முன்பக்க மின்விளக்கு எரியாமல், பழுதடைந்துபோனதால், பாலத்தில் முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு அதனை சிறுவனின் தந்தையர் சரி செய்துகொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் சிறுவனின் தாய் முச்சக்கரவண்டியில் இருந்து இறங்கி பாலத்தின் எதிர்ப்பக்கமாக சென்றுள்ளார்.
அப்போது சிறுவன் வீதியின் குறுக்காக கடந்து தாயாரிடம் செல்ல முற்பட்டபோது வாகரையை நோக்கி பயணித்த வேன் சிறுவனை மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த சிறுவன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளான்.
இதனையடுத்து வேன் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.