மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வேன் விபத்தில் உயிரிழந்த களனி பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவு பிரதானி, சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி என்.டி.ஜி. கயந்த குணேந்திரவின் மனைவியும் காலமானார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
இதன்படி, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
கடந்த 18 ஆம் திகதி குருநாகல் பகுதியிலிருந்து மீரிகம நோக்கி பயணித்த வேன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் பயணித்த பாரவூர்தியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.