ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மாத்தறை , கொட கமவில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ருமேனியாவில் தொழில் வழங்குவதாக பணம் வசூலித்ததாகவும், அந்த வேலை வாய்ப்புகளை வழங்கவில்லை எனவும் பணியகத்திற்கு 53 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின்படி, குறித்த சந்தேகநபரால் சுமார் 1கோடி 30 இலட்சம் ரூபாவுக்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி குறித்த வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் பணியகத்திற்கு அழைக்கப்பட்டு பணியக சட்டத்தில் உள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நீதவான், தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.


