40 இலட்சம் ரூபா கப்பம் பெறுவதற்காக வைத்தியர் ஒருவரை கடத்தி வீடொன்றில் அடைத்து வைத்திருந்த 28 வயதுடைய தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் வைத்தியரையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பதுளை பிரதேசத்தை சேர்ந்த விசேட மகப்பேறு வைத்திய நிபுணரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த ஆசிரியர், வைத்தியரை தொலைபேசியில் மெட்டியகொடை பிரதேசத்திற்கு அழைத்து காரில் ஏற்றி மெட்டியகொட பிரதேசத்தில் இரண்டரை நாட்கள் வீடு ஒன்றில் அடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இதுவரை 3 பேர் கொல்லப்பட்டுள்ளப்பட்டுள்ளதுடன் 40 இலட்சம் ரூபா கப்பம் கொடுக்கவில்லை என்றால் நான்காவதாக வைத்தியரை கொலை செய்யப்போவதாகவும் ஆசிரியர் மிரட்டியுள்ளாதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.