வௌ்ளை வேனில் இளைஞன் கடத்தல்!!!
களுத்துறை ஹீனடியங்கல பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதான ரொஷான் அஷான் எனும் இளைஞர் ஒருவரை வெள்ளை வேனில் வந்த சிலர் கடத்திச் சென்றதாக கிடைத்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட இளைஞனின் தாயார் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் வெள்ளை வேனில் வந்து இளைஞனை ஹீனடியங்கல தேவாலயத்திற்கு அருகில் வைத்து தாக்கி கடத்தியுள்ளதாக இதுவரையான விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள அவர்களை உடனடியாக கைது செய்வதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளனர்.
![]()