ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்புரிமை மற்றும் பிரதி தலைவர் பதவியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் நீக்கப்பட்டுள்ளார்.
அவரை குறித்த பதவியிலிருந்து நீக்குவதற்கான கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் தீர்மானத்திற்கு அமைய அவர் இதுவரையில் செயற்படாமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.