July 18, 2025
ஷஹ்ரான் மற்றும் குழுவினர் ஒத்திகை தாக்குதலை மேற்கொண்டதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு
News Top இலங்கை அரசியல் புதிய செய்திகள்

ஷஹ்ரான் மற்றும் குழுவினர் ஒத்திகை தாக்குதலை மேற்கொண்டதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு

Dec 7, 2023

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் ஷஹ்ரான் மற்றும் குழுவினர் ஒத்திகை தாக்குதலொன்றை மேற்கொண்டனர் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றிற்கு பதில்அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் ஏப்ரல் 16 ஆம் திகதி ஷஹ்ரான் குழுவினர் தாழங்குடாவில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

இது குறித்து தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜயவர்த்தன அப்போதைய பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு தெரிவித்தார் என கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஷஹ்ரான் குழுவினர் தங்கியுள்ள இடம் அவர்களது அமைப்பு குறித்து தகவல்களும் வழங்கப்பட்டது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *