ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக் கான் நடித்த டங்கி படம் வெற்றி பெற்றது. இந்த படம் விசா இல்லாமல் வெளிநாட்டிற்கு செல்பவர்களின் அவலை நிலையை காட்டுவதை கருவாக கொண்டதாகும்.
இந்த படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது. இந்த நிலையில் இந்த கூட்டணி மீண்டும் புதுப்படம் மூலம் இணைய இருக்கிறது.
இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
ஷாருக் கான் ஏற்கனவே ஜவான் படத்தில் தென்இந்திய நடிகையான நயன்தாராவுடன நடத்தியுள்ளார்.தற்போது சமந்தா உடன் நடிக்க இருக்கிறார்.
அதிரடியான தேசபக்தி கொண்ட படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா கடைசியாக 2023-ல் குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.
Post Views: 2