December 17, 2025
ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி – சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு!
World News புதிய செய்திகள்

ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி – சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு!

Nov 17, 2025

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

எனினும், அவருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனைகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், சர்வதேச ஊடகங்கள் இதை மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சியாக வெளிப்படுத்துகின்றன.

2024 ஆம் ஆண்டு மாணவர் முன்னிலையில் வெடித்த போராட்டங்களை அடக்குவதற்காக படுகொலை, சித்திரவதை மற்றும் பொதுமக்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு அவர் நேரடியாக உத்தரவிட்டதாக வழக்கில் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த வன்முறைகளில் சுமார் 1,400 பேர் உயிரிழந்ததாக குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது. இதனையடுத்து, ஹசீனாவுக்கு மரண தண்டனையே வழங்கப்பட வேண்டும் என மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.

போராட்டங்களை அடுத்து 2024 ஆகஸ்ட் 5 ஆம் திகதி பதவியை விட்டு விலகி இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஹசீனா, நீதிமன்ற உத்தரவுகளை மீறி நாடு திரும்ப மறுத்ததால், அவர் இல்லாத நிலையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

மேலும், 2025 ஜூலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவரது கைது அல்லது சரணடைவு அமுலாகும் வகையில் 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

ஷேக் ஹசீனாவுக்கு எதிரான இந்த வழக்கு பங்களாதேஷ் அரசியலின் முக்கிய திருப்புமுனையாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஒரு முன்னாள் பிரதமருக்கு மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டில் இத்தகைய கடுமையான தீர்ப்பு வழங்கப்படுவது அபூர்வமானது என்பதாலும் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

தற்போது இடைக்கால அரசாங்கம் ஹசீனாவை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாலும் இந்த தீர்ப்பு பிராந்திய அரசியலிலும் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *