மார்ச் மாதம் 05 ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை விற்பனை செய்வதற்கான ஏலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விலை மனுக்கள் கோரப்படும் என துறைமுக, கடல்மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட விலைமனுக்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கு ஆதரவளிக்க தொழில்நுட்பக் குழுவொன்று நியமிக்கப்பட்டு அவர்கள் விலைமதிப்பீடுகளை மதிப்பீடு செய்து இறுதியாக அமைச்சரவைக்கு அனுப்பி வைப்பார்கள் என்று அவர்
மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தபட்சம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கான வலுவான முதலீட்டாளர் வரவேண்டும் என்றுள்ளதுடன் விமான நிறுவனத்தின் 6,000 பணியாளர்களின் வேலைகளை பாதுகாப்பதும் அவசியம் என்றும் நிமல் சிறிபால டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.