எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவருக்கு ஆதரவளிப்பதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் நாயகம் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம் (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து கட்சி இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனைத்து பிரச்சினைகளையும் முடித்துக் கொண்டு, கிராம மட்டத்தில் கட்சியை மீண்டும் பலப்படுத்தி எதிர்வரும் தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.