ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அந்த கட்சியின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தல் காலப்பகுதியில் கட்சிக்கு எதிரான வகையில் பிரசாரங்களை முன்னெடுத்தமை தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸிற்கு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.