ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை நேற்று (15) சமர்ப்பித்த பின்னர், கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகைக்குச் சென்று, அங்கு ஸ்ரீ தலதா மாளிகையை வழிபட்டு ஆசி பெற்றார்.
ஸ்ரீ தலதா மாளிகையின் பிரதம பாதுகாவலர் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேலவினால் ஜனாதிபதி வரவேற்கப்பட்டார்.
அதன் பின்னர் மேல் அறைக்குச் சென்ற ஜனாதிபதி, அங்கு சமய வழிபாடுகளில் ஈடுபட்டு, பல்லக்குக்கு வணக்கம் செலுத்தி ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்தார்.
மல்வத்து பீடத்தின் பிரதான பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரர்களிடம் ஆசி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து அஸ்கிரி மகா விகாரைக்குச் சென்ற அவர் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.